அரியர் தேர்வெழுதிய வாலிபர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
கடலூர், நவ. 12: அரியர் தேர்வெழுதிய வாலிபர், திடீரென கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பகுதியில் தனியார் கல்லூரியில் நேற்று காலை அரியர் தேர்வு நடந்தது. இந்நிலையில் கல்லூரியில் படித்த பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்த உதயகுமார்(21) என்பவர், கல்லூரியின் 2வது மாடியில் அரியர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென தேர்வறையிலிருந்து வெளியே வந்த உதயகுமார், 2வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.