Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே தொகுதியில் அபுதமமுக, பாமக ராமதாஸ் தரப்பு மனு தாக்கலால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை, ஏப். 7: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வி.கே.சசிகலாவின் அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உதயகுமார் நேற்று உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமாரிடம் மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தலைமையிலான அணியின் சார்பில் ஏற்கனவே வழக்கறிஞர் சுரேஷ்குமார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த கூட்டணியை சேர்ந்த அபுதமமுக சார்பில் உதயகுமார் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தலைமையிலான அணியை சேர்ந்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஒரே கூட்டணியை சேர்ந்தவர்கள் இரண்டு பேர் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் வாக்காளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.