புதுச்சேரி, ஏப். 7: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் 9ம் தேதி நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தடுப்பு காவலில் உள்ள வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டார். மேலும், சிறையில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட பின், சிறையில் உள்ள கைதிகளை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, காலாப்பட்டு தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு, அங்குள்ள குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட வசதிகளான சாய்வுதள அமைப்பு, கழிப்பறை, குடிநீர், மின்சார வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தார்.
+
Advertisement

