Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

கடலூர், பிப். 5: சென்னை பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். கடலூர் வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகரன் மகன் காலேப். இருவருக்கும் திருமணம் செய்வதாக உறவினர்கள் பேசி முடித்ததாகவும், அதனால் இருவரும் போனில் அடிக்கடி பேசி பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.இருவருக்கும் கடந்த மாதம் 15ம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில், காலேப், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், இதற்கு அவரது சகோதரி உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காலேப் ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி விட்டதாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். அதன் பேரில் காலேப், அவரது சகோதரி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.