சிதம்பரம், ஆக. 29: சிதம்பரம் எம்எல்ஏவுக்கு போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரிக்கு போன் மூலம் மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் உள்ள, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவருமான தமிமுன் அன்சாரிக்கு கடந்த 27ம் தேதி இரவு அடையாளம் தெரியாத ஒருவர் போன் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அவர் சட்டமன்றத்தில் ஏன் சிதம்பரம் தொகுதி பற்றி சரியான முறையில் பேசுவதில்லை என ஆபாசமாக திட்டி உள்ளார். எனவே எம்எல்ஏவிடம் பேசிய மர்ம நபரை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். அப்போது மஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



