பண்ருட்டி, ஆக. 26: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ்.கே.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேல் (25). இவர் கடந்த ஆண்டு பண்ருட்டி அருகே புலவனூரில் வயதான மூதாட்டி ஒருவரிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுந்தரவேலுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், சுந்தரவேலை தீவிரமாக தேடி வந்தனர். நேற்று அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
+
Advertisement


