Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வானூர் அருகே வேன் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு

வானூர், ஆக. 28: வேனில் இருந்து கீழே இறங்கி வந்த டிரைவரை தாக்கி, விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிளியனூர் அடுத்த கொந்தமூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(31), டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வேனில் புதுச்சேரி நோக்கி சென்றுள்ளார். திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் துருவை சந்திப்பில் வேனை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள், பாக்கியராஜ் தனது கையில் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர்.

அதில் சுதாகரித்துக்கொண்ட அவர் அதனை தடுக்க முயன்றார். அப்போது அந்த நபர்கள் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். கீழே விழுந்ததில், அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து பாக்கியராஜ், ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் பறித்து சென்ற 4 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.