Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வடமாநிலத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 240 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம், ஆக. 26: விழுப்புரத்தில் வடமாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 240 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமதல் செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வடமாநிலங்களிலிருந்து இந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ரயில் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் கடத்திவரப்படுவதாக கிடைத்த ரகசிய தகலின் பேரில் முக்கிய இடங்களில் வாகன சோதனை மற்றும் ரயில்களில் சோதனை செய்தனர்.

அதன்படி விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் நேற்று வீரன்கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 14 மூட்டைகள், கூல்லிப் 5 மூட்டைகள் என மொத்தம் 240 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் இருந்தவர்களை பிடித்து விசாரித்தபோது ராஜஸ்தான் மாநிலம் ேஜாலூர் மாவட்டம் வாகூடா பகுதியை சேர்ந்த மனோகர்சிங்க(25), ஜோலார் மாவட்டம் தும்பாடியா பகுதியை சேர்ந்த ஜித்தேந்தர்குமார்(22) என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.4.50 லட்சம் ஆகும்.