Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

விக்கிரவாண்டி அருகே புதுமண தம்பதியின் அறையில் ரூ.10 லட்சம் நகை, வெள்ளி திருட்டு

விழுப்புரம், அக். 23: புதுமண தம்பதியின் அறையில் 10 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பூரிகுடிசையை சேர்ந்தவர் மெல்வின்(எ)அகஸ்டின். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன் திருமணமான நிலையில் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். அகஸ்டின் தனது அறையில் உள்ள பீரோவில் திருமணத்தின்போது போடப்பட்ட நகை, வெள்ளி, ரொக்க பணத்தை வைத்திருந்துள்ளார். கடந்த 12ம் தேதி வெளியூர் சென்ற அகஸ்டின், கார்த்திகா ஆகியோர் வீட்டிற்கு வந்து நகைகளை பீரோவில் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நகைகளை எடுக்க பீரோவை திறந்து பார்த்தபோது அதில் ஒரு மோதிரம் மட்டும் வெளியில் தனியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பீரோவில் உள்ள பெட்டியில் பார்த்தபோது திருமணத்தின்போது போட்ட 10 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி, ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் மூலமும் நகை திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பீரோவின் 2 சாவிகளை தனித்தனியாக வைத்து வந்ததும், அதில் ஒரு இடத்தில் வைத்திருந்த சாவி சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. எனவே திருட்டில் ஈடுபட்டவர்கள் இந்த சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து நகைகளை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன நகை, வெள்ளி, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.