Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சபரிமலையில் தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரித்த இருமுடி பை ரூ.300க்கு விற்பனை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பண்ருட்டி, அக். 23: சபரிமலையில் தமிழக அரசின் இலவச வேட்டியில் தயாரித்த இருமுடி பை ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஐயப்ப பக்தர் நவநீதகிருஷ்ணன். இவர் சபரிமலைக்கு மாலை அணிந்து யாத்திரை சென்றிருந்தார். சபரிமலை செல்லும் வழியில் பம்பையில் கேரள அரசின் தேவசம் போர்டு சார்பில் நடத்தப்படும் கடையில் இருமுடி கட்டுவதற்கான பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த பைகளை வாங்கி பார்த்தபோது, அது தமிழக அரசு பொங்கல் தொகுப்புடன் இலவசமாக வழங்கிய வேட்டியில் தயாரிக்கப்பட்டது என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய பொங்கல் 2025 - அரசு வேட்டி என்று பையில் இருந்த இலவச வேட்டிகளை கொண்டு தைக்கப்பட்ட இருமுடி பை ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் நவநீதகிருஷ்ணன் கேட்டபோது, தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளனர். தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கிய வேட்டிகள் எப்படி கேரள அரசின் கடைக்கு விற்பனைக்கு வந்தது?. இலவச வேட்டிகள் மொத்தமாக விற்கப்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.