புவனகிரி, மே 19: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பெரியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகள் ஜெசிதா(20). இவர் சிதம்பரத்தில் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஜெசிதா தனது வீட்டிலிருந்து திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து அவரது தாய் ஜோதிலட்சுமி புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


