Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதையில் தகராறு: 6 பேர் கைது

புதுச்சேரி, மே 19: புதுச்சேரி பெரியகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மிஷின் வீதி- செட்டி வீதி சந்திப்பு அருகே ஆசாமி ஒருவர் மதுபோதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அதில், மதுரையை சேர்ந்த கார்த்திகேயன்(20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.இதேபோல் பல்வேறு இடங்களில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட வைத்திக்குப்பத்தை சேர்ந்த கார்த்திக்(30), வில்லியனூரை சேர்ந்த சந்தோஷ்(19), அரவிந்த்(30), விக்னேஷ்(29), முதலியார்பேட்டையை சேர்ந்த பூபேஷ்(40) ஆகியோரை அந்தந்த காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.