கடலூர், ஆக. 18: கடலூர் மாவட்ட நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை உதவி இயக்குனர் ஆனந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:நில அளவை துணை ஆய்வாளர் குணசேகரன் (தற்போது சிறப்பு வட்டாட்சியர் அலுவலகம், நெய்வேலி) (பணிபுரிந்து வருபவர்). இவர் முன்னர் பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் கிராமத்தில் பணிபுரிந்தபோது, பட்டா மாறுதல் தொடர்பாக பணம் கோரிப் பெற்றதாகவும், தனிநபர்களுடன் பல முறை ஜிபே மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தெரியவந்துள்ளதால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டது.
நில அளவை துணை ஆய்வாளர் குணசேகரன் மீது சுமத்தப்பட்டுள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, பொது நலன் கருதி, நில அளவை துணை ஆய்வாளரை குணசேகரன் பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்வது அவசியமாகிறது.


