Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காரைக்கால் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

காரைக்கால், ஆக. 18: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் காரைக்காலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது காரைக்காலைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோவை அந்தப் பெண்ணின் மகனுக்கு அசோக்குமார் அனுப்பியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் மகன் அளித்த புகாரின் பேரில், காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரிடம் விசாரணை நடத்தினர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது, 18 வயதுக்கு உட்பட்ட சிறுமி தொடர்பான தகவல்கள் இருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது.