Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

நெய்வேலியில் பயங்கரம் வாலிபர் வெட்டி படுகொலை

நெய்வேலி, ஆக. 17: நெய்வேலியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி கீழ் வடக்குத்து கிழக்கு தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கோபி(30), பிரபல ரவுடி. இந்திரா நகர் பி2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அமிர்தலிங்கம் மகன் ஆனந்தராஜ்(36). ரவுடி பட்டியலில் உள்ள இவருக்கும், ரவுடி கோபிக்கும், கடந்த 8 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது.\

இந்நிலையில் நெய்வேலி வட்டம் 2ல் உள்ள அரசு மதுபான கடை பின்புறம் உள்ள சுடுகாட்டில் நேற்று ஆனந்தராஜ், தனது நண்பர் நரேஷ்குமார்(25) உள்பட 5 பேருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது கோபி, தனது நண்பர்கள் 20 பேருடன் 3 காரில் ஆனந்தராஜ் இருந்த இடத்திற்கு சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத ஆனந்தராஜ் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடினர்.கோபி தரப்பினர் அவர்களை விரட்டி சென்று, ஆனந்தராஜ் மற்றும் நரேஷ்குமாரை மடக்கி, கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.