Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது பைக் மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

பண்ருட்டி, ஆக. 17: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர்(23). இவரது நண்பர் சிந்தனைசெல்வன்(26). இவர்கள் இருவரும் நேற்று மாலை பெரிய எலந்தம்பட்டில் இருந்து திருவாமூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

திருவாமூர் பாலம் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை பைக்கில் வந்தவர்கள் முந்திச் செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் எதிரே வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த பாஸ்கர் மற்றும் சிந்தனைசெல்வன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த பண்ருட்டி டிஎஸ்பி ரகுபதி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.