Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி, அக். 16: புதுச்சேரி லாஸ்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் இரவு ஆசாமி ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (26), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து அவர் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.