Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மயிலம் அருகே பரபரப்பு; வீட்டுக்குள் புகுந்து ரூ.7 லட்சம் நகை, வெள்ளி திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

மயிலம், அக். 16: விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த முப்புளி கிராமம் கூட்டேரிப்பட்டு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார்(65), கட்டிட கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சுகுமாரும், அவரது மனைவியும் வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, வீட்டிற்குள் இருந்த பீரோவை திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 5 பவுன் செயின், 101 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.7400 ரொக்கம் பணம் என சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீரோவிலேயே சாவி தொங்கவிடப்பட்டிருந்ததால், நள்ளிரவு திறந்திருந்த வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மயிலம் காவல் நிலையத்திற்கு சுகுமார் தகவல் தெரிவித்தார். மயிலம் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..