Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அன்லிமிடெட் பீர்... ஆனா உச்சா போகக்கூடாது: ஆபர் கொடுத்த மதுபான கடைக்கு சீல்

புதுச்சேரி, அக் 15: புதுச்சேரியில் அன்லிமிடெட் பீர் குடிக்கலாம், ஆனால் உச்சா போகக்கூடாது என ஆபர் கொடுத்த மதுபான கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வார விடுமுறைகளில், புதுச்சேரியில் குவியும் இளசுகள், பப், ரெஸ்ட்டோரண்ட் என விடிய, விடிய ஆட்டம் போடுவது அதிகரித்துள்ளது. நள்ளிரவை தாண்டியும் நடக்கும் இந்த கூத்து, உள்ளூர்வாசிகளுக்கு எரிச்சலை கூட்டினாலும், நடவடிக்கை இல்லை. எல்லாம் அரசின் வருமானத்துக்குதான் என கண்டுகொள்ளாமல் கண்ணை மூடிக்கொள்கிறது கலால் மற்றும் காவல்துறை. இதன் விளைவு கலால் விதிகளை மீறி குடிக்க வாங்க... குடிக்க வாங்க... என இன்ஸ்டா உள்ளிட்ட பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அழைக்கும் அளவுக்கு நிலைமை எல்லை மீறி போய்விட்டது. ஒன் பிளஸ் ஒன், ரூ. 500க்கு 5 பீர், சரக்குடன் சைடிஷ் ப்ரீ என கடைக்கு முன்னாடி விளம்பர பதாகை வைச்சிருந்த காலம் மலையேறிவிட்டது.

கலால் சட்டத்தின் படி சமூக வலைதளத்தில், இப்படி விளம்பரப்படுத்துவது தவறு என்றாலும், கடையை புரமோஷன் செய்ய உரிமையாளர்கள் தவறுவதில்லை. பலரும் இதேபோல் இளசுகளை இழக்கும் வகையில் மதுபானத்தையும் கடையும் ஊக்குவிக்கும் வகையில் தொடர்ச்சியாக விளம்பரம் செய்வதாக கலால் துறைக்கு புகார்கள் குவிகிறது. கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவுப்படி கலால் துறை தாசில்தார் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் கருவடிக்குப்பதில் இயங்கிவரும் ஒரு மதுபான கடை மற்றும் திருவள்ளுவர் சாலையில் இயங்கி வரும் ஒரு சுற்றுலா வகை மதுபான கடைக்கு அதிரடியாக சீல் வைத்தனர். மேலும் கலால் சட்டத்தின் கீழ், உரிமம் பெற்றவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடகங்கள் குறிப்பிட்ட பிராண்டு மதுபானங்களயும், மதுபான கடை இருக்கும் இடத்தை விளம்பரப்படுத்து கலால் விதிகளின்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் சமீப காலமாக, ஒரு சில உரிமம் பெற்ற மதுபான கடை வைத்திருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது, இது போல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்தது. அதோடு சம்மந்தப்பட்ட கடைகள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. இதில் கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் மதுபான கடை, விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. ரூ.1199 செலுத்தினால் அன்லிமிடட் பீர் குடிக்கலாம் என்ற ஆப்ரோடு, அடி வயிற்றை கலக்கும் நிபந்தனையாக சிறுநீர் கழிக்க கூடாது என்ற நிபந்தனை விதித்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மூன்று பீர் குடித்தும், ஒரு மணி நேரம் கூட தாக்குப்பிடிக்க முடியாமல் எல்லோரும் அவுட் ஆனதாக மதுப்பிரியர்கள் கூறுகின்றனர். இது போங்கான விளம்பரம் இதனை நம்பி வந்து, பணத்தை இழந்துவிட்டோம என மறுபக்கம் சோகமாக கூறும் மதுப்பிரியர்கள்.