Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வழக்கில் ஆஜராகாத திட்டக்குடி தாசில்தார், ராமநத்தம் சார் பதிவாளருக்கு பிடிவாரண்ட்

திட்டக்குடி, அக். 14: திட்டக்குடி தாசில்தார், ராமநத்தம் சார் பதிவாளர் ஆகியோருக்கு சார்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாசி மகன் குணசேகரன். இவர் அரசு நிலத்திற்கு பட்டா கொடுத்தது சம்பந்தமாக திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் திட்டக்குடி தாசில்தார், ராமநத்தம் சார் பதிவாளர், ஆவட்டி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

இவ்வழக்கு விசாரணை நேற்று வந்தபோது வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் இருவரும் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் சம்மனை பெற்றுக் கொண்டு நீதிமன்றத்திற்கு ஆஜராகாத திட்டக்குடி தாசில்தார் மற்றும் ராமநத்தம் சார் பதிவாளர் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து திட்டக்குடி சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.