Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

பண்ருட்டி அருகே மணல் கடத்தல் லாரி பறிமுதல்

பண்ருட்டி, அக். 10: முத்தாண்டிக்குப்பம் காவல் ஆய்வாளர் தருமலிங்கம் மற்றும் போலீசார் நேற்று காலை செம்மான்குப்பம்-முத்தாண்டிக்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தியுள்ளனர். போலீசாரை கண்டதும் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு இறங்கி அருகில் இருந்த முந்திரி காட்டில் ஓடி மறைந்தார்.

இதையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்தபோது, அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கீழ் காங்கேயன்குப்பத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.