புவனகிரி, ஆக. 10: சிதம்பரம் அண்ணாமலை நகர் மீதி குடி அண்ணா நகரை சேர்ந்த ராஜாராமன் மனைவி சாந்தி(55). இவர் கடந்த 7ம் தேதி அதே பகுதியில் வசிக்கும் தனது மூத்த மகன் ராஜேஷ் என்பவரின் முதல் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றவர், இரவு அங்கேயே தங்கி விட்டதாக தெரிகிறது. மறுநாள் 8ம் தேதி காலையில் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பெட்டியில் வைத்திருந்த மூன்றரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இது குறித்து அண்ணாமல நகர் காவல் நிலையத்தில் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



