Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

புதுவை மதுபாட்டில்கள் விற்ற வாலிபர் கைது

பண்ருட்டி, அக். 9: கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மகன் தனுஷ்(21). இவர் கடந்த 4ம் தேதி தனது வீட்டின் பின்புறம் புதுவை மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது, தனுஷ் தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 180 மி.லி. பிராந்தி 10 பாட்டில், 180 மி.லி. பிஸ்ெகட் பிராந்தி 10 பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தனுஷை, காவல் ஆய்வாளர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.