உளுந்தூர்பேட்டை, அக். 9: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் சுமார் அரை மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் வெள்ளம் போல் சென்றது. கடுமையான வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இதே போல் எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மிதமான மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


