புதுச்சேரி, அக். 9: புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 42 வயது பெண். சம்பவதன்று இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் வங்கியில் இருந்து பேசுவதாக கூறிய அவர், அந்த நேரத்தில் வங்கியில் இருந்து வருவதுபோன்ற ஒரு லிங்க்கை மகேஸ்வரிக்கு அனுப்பி அதை கிளிக் செய்யுமாறு கூறியுள்ளார். இதை நம்பிய உமா மகேஸ்வரி அதை கிளிக் செய்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில், அவரது செல்போனை மர்ம நபர்கள் ஹேக் செய்து கிரெடிட் கார்டிலிருந்த ரூ.2.60 லட்சத்தை எடுத்துள்ளனர்.
மேலும் மற்றொரு வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்தனர். தொடர்ந்து, மோசடி வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


