Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

சிதம்பரம் அருகே அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு: போலீசார் விசாரணை

சிதம்பரம், அக். 8: சிதம்பரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் மகாராசன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் வேல்முருகன் (55). இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் பரிசோதராக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டி விட்டு இவரும், இவரது மனைவியும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அன்று மதியம் வீட்டில் வேலை செய்யும் தீபா என்ற பெண் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, முன்பக்க கேட்டு திறந்த நிலையில் இருந்தது. மேலும் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்ட நிலையில், பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தொடர்ந்து செல்போன் மூலம் வீட்டின் உரிமையாளர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் வேல்முருகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த ரூ.7,000 உண்டியல் பணம் மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கு, பித்தளை காமாட்சி விளக்கு மற்றும் பித்தளை அன்னபூரணி சிலை மற்றும் ஹேண்ட் பேக்கில் இருந்த ரூ.7,000 பணம் உட்பட மொத்தம் ரூ.1.42 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து வேல்முருகன், சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.