Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கால்நடை தீவன கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி: பிரபல ரவுடி கைது

வடலூர், செப். 8: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். வடலூர் ஆபத்தாரணபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் சிவானந்தம்(28). இவர் வடலூர் சேராக்குப்பம் பகுதியில் கால்நடை தீவன கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை 3 மணியளவில் சிவானந்தம் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, வடலூர் ஆர்.சி. காலனியை சேர்ந்த ரவி மகன் சத்தியசீலன்(32) அங்கு வந்து, மது அருந்துவதற்காக சிவானந்தத்திடம் பணம் கேட்டுள்ளார்.

பணம் தர மறுத்ததால், கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, பலவந்தமாக பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவானந்தம், வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி சத்தியசீலனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சத்தியசீலன் மீது வடலூர் காவல் நிலையத்தில் குற்றச் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.