Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாணவனை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட்

வடலூர், செப். 8: மாணவனை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியை அடுத்த புலியூர் காட்டுசாகை கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன்(16). இவர் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் சிறப்பு வகுப்பு என்பதால் பள்ளிக்குச் சென்றவர், வகுப்புகள் முடிந்ததும் சுப்பிரமணியபுரத்திலிருந்து குள்ளஞ்சாவடி வந்தார். அங்கிருந்த புலியூர் காட்டுசாகைக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறினார். அப்போது அந்த பேருந்தின் நடத்துநர் ராயர், பயணச்சீட்டு எடுக்கக் கூறியுள்ளார். அதற்கு அந்த மாணவன் தான் பள்ளி மாணவன், பள்ளிக்கு சென்றுவிட்டு வருகிறேன். மேலும் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி பயணம் செய்ய அனுமதிக்கக் கோரியுள்ளார்.

ஆனால் நடத்துநர் மாணவரை அம்பலவாணன்பேட்டையில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றார். மாணவன் பசியோடு வீட்டிற்கு நடந்து செல்வதை அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் வைரலாகியது. இதையடுத்து அந்த பேருந்தின் நடத்துநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதாக கடலூர் போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர். விடுமுறை நாளில் சிறப்புவகுப்புகள் நடத்தப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.