புவனகிரி, செப். 8: புவனகிரி பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. புவனகிரி அருகே உள்ள வன்ராயன்பட்டு என்ற இடத்தில் ஒரு டாஸ்மாக் கடையும், புவனகிரி அருகே உள்ள குறியாமங்கலம் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடையும் உள்ளது. இந்த இரண்டு கடைகளிலும் சரக்குகள் தீர்ந்து போனதால் இரண்டு கடைகளும் மூடப்பட்டன. இதனால் குடிமகன்கள் திண்டாடினர். இந்நிலையில் புவனகிரியில் இருந்து குறியாமங்கலம் செல்லும் சாலையில் இயங்கி வரும் மற்றொரு டாஸ்மாக் கடை திறந்து இருந்ததால், அங்கு குடிமகன்கள் திரண்டனர். இந்த கடையில் மட்டுமே மதுபானம் இருந்ததால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குடிமகன்கள் இந்த கடைக்கு வந்தனர்.
சிதம்பரம்: கடந்த சில நாட்களாக சிதம்பரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் வரத்து குறைந்து காணப்பட்டதால், கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று போலீஸ் பாதுகாப்புடன் வாங்கி சென்று வருகின்றனர்.
மேலும் ஒரு சில டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் தீர்ந்து வட்டதால் கடைகளை திடீரென மூடி சென்று விட்டனர். இதனால் மது பிரியர்கள் தனியார் பார்களில் குவிந்தனர்.


