Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு: பாதுகாப்பு கேட்டு ஊழியர்கள் போராட்டம்

காட்டுமன்னார்கோவில், செப். 7: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுபான பாட்டில்கள் போதிய அளவில் இல்லாததால், கேட்ட மதுபானம் கிடைக்காமல் சில மதுபிரியர்கள் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது போதையில் இருந்த சிலர் கடைக்குள் பணியில் இருந்த ஊழியர்களை வெளியே வரவிடாமல் ஷட்டரை மூடி, கடைக்கு தீ வைத்ததால் கடைக்குள் சிக்கிய ஊழியர்கள் அலறிய நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

மேலும், கடையின் அருகே இருந்த பியூஸ் கேரியரை மர்ம நபர்கள் பிடுங்கி சென்றனர், தகவலறிந்து வந்த காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சையத் அப்சல் மற்றும் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர், இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து கடை மேலாளர் சங்கர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் சில மணி நேரம் கடையை மூடி, ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனால் மதுபானம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.