செஞ்சி, ஆக.5: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெரியாமூரை சேர்ந்த சேட்டு (30), இவரை வேலைக்கு சிங்கப்பூர் அனுப்புவதாக கூறி ஆலம்பூண்டியை சேர்ந்த ரங்கசாமி மகன் முருகன் என்பவர் ரூ.5 லட்சம் பணம் வாங்கியுள்ளார். அதற்கு காரைக்குடி பகுதியை சேர்ந்த மாதவி என்பவர் உறுதுணையாக இருந்துள்ளார். இந்நிலையில் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யாததால் பணத்தை சேட்டு திருப்பி கேட்டபோது முருகன் மற்றும் மாதவியும் சேட்டுவை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் முருகன் மற்றும் மாதவி இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
+
Advertisement
