சங்கராபுரம், செப். 5: சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.குளத்தூர் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி மகன் பிரபாகரன். இவர் காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது தந்தை கடந்த மாதம் 30ம் தேதி இறந்து விட்டார். தற்போது இவர் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் எஸ்.குளத்தூரில் இவரது பூர்வீக வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் பிரபாகரனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் காஞ்சிபுரத்தில் இருந்து உடனடியாக எஸ்.குளத்தூரில் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் 10,000 ஆகியவை திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சடைந்தார். இதுகுறித்து அவர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.


