Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரக்காணத்தில் இரும்பு ஜாக்கிகளை திருடிய வாலிபர் கைது

மரக்காணம், ஜூலை 3: மரக்காணம் சன்னதி தெருவில் வசிப்பவர் தயாளன். இவர் மரக்காணம் அரசு பொது மருத்துவமனை எதிரில் புதிய வீடுகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் சென்ட்ரிங் பொருட்களை வாடகைக்கு விடும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 22ம் தேதி தனது கடையை மூடிவிட்டு, வழக்கம் போல் மறுநாள் காலையில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சென்ட்ரிங் வேலைக்கு பயன்படுத்தப்படும் இரும்பு ஜாக்கிகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இரும்பு ஜாக்கிகளை மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மாதேஷ்(20) என்பவர் திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து மாதேஷை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.