உளுந்தூர்பேட்டை, ஜூலை 3: கள்ளக்குறிச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி புவியியலாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் நேற்று காலை உளுந்தூர்பேட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புல்லூர் குறுக்கு ரோடு அருகில் சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த 2 லாரிகளை பறிமுதல் செய்து எடைக்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து கூழாங்கற்கள் கடத்தி வந்து தப்பி ஓடிய 2 லாரிகளின் டிரைவர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement
