Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பைக் மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

திண்டிவனம், ஜூன் 2: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் சேதுநாதன்(28). இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார்(30), திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ரங்கநாதன் மகன் ராஜபாண்டி (28) ஆகியோர் ஒரே பைக்கில் நேற்று முன்தினம் இரவு செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். மேல்பேரடிகுப்பம் பகுதியில் சென்றபோது எதிரே திருவண்ணாமலை மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சேதுநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ரோசணை போலீசார் இறந்த சேதுநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த ரஞ்சித்குமார், ராஜபாண்டி ஆகியோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரையும் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து ரஞ்சித்குமார் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்தி விட்டு காரில் தப்பிச்சென்ற சென்றவர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.