மழையால் நிலச்சரிவில் சிக்கிய மாற்றுத்திறனாளி தப்பிய வீடியோ வைரல்
செங்கம், டிச. 3:திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழையால் ஆங்காங்கே காட்டாற்று வெள்ள கரைபுரண்டு ஓடியது. இதில் செங்கம் அடுத்த ராமாபுரம் வனப்பகுதியையொட்டி உள்ள கல்லடாவி என்ற கிராம பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிக்கும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
Advertisement
Advertisement