Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை எதிரொலி; வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்: அதிகாரிகள் தகவல்

வேலூர், செப்.30: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை எதிரொலி வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, நாளை முதல், வரும் 4ம் தேதி சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் நாளை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை சென்னை, பெங்களூரு, திருச்சி, சேலம், ஓசூர், திருப்பத்தூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.