Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை வேலூர் கோர்ட் உத்தரவு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த

வேலூர், டிச.27: குடியாத்தம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வேப்பூர் முல்லை நகர் ஆர்.எஸ். பகுதியை சேர்ந்தவர் முத்து(24), கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை அங்குள்ள ஏரிக்கு கடத்திச் சென்றள்ளார். அங்கு அவர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தியா ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட முத்துவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.