Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது

வேலூர், செப்.26: காட்பாடி கிறிஸ்டியன்பேட்டை சோதனைச் சாவடியில் காட்பாடி போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து வந்த அரசு பஸ்சில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (48) என்பது தெரியவந்தது. அவரது பையை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட குட்கா பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் சங்கரிடம் இருந்து 4 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.