பொன்னை, செப். 26 : காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ளிபுதூர் செக் போஸ்ட் வழியாக தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் கடத்துவதாக திருவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்ஐ மஞ்சுநாதன் தலைமையிலான போலீசார் உள்ளிபுதூர் செக்போஸ்ட் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலூர் அடுத்த நாகநதி பகுதியை சேர்ந்த செல்வம் (54), திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த குமார்(45), ஒடிசா மாநிலம் குந்தை நவரம்பூர் பகுதியை சேர்ந்த சரோஜ் நாதாம்(26). இவர்கள் மூன்று பேரும் ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் சுமார் 5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்து காட்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


