Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேலூர் அருகே முன்னாள் ராணுவவீர் வீட்டில் 6 சவரன் திருட்டு

வேலூர், செப்.25: வேலூர் அருகே முன்னாள் ராணுவவீரரின் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அரியூர் அடுத்த அகமேடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சகுந்தலா(58). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது. கோவிந்தசாமி இறந்த நிலையில் சகுந்தலா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தொரப்பாடியில் உள்ள மகள் வீட்டுக்கு சகுந்தலா சென்றுள்ளார்.

பின்னர், மீண்டும் நேற்று காலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சகுந்தலா உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 6 சவரனை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அரியூர் போலீசில் சகுந்தலா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.