Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மணல் கடத்திய லாரி பறிமுதல்

வேலூர், செப்.25: பாகாயம் போலீசார் சங்கரன்பாளையம் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நின்ற லாரியின் டிரைவரிடம் விசாரித்த போது திருவண்ணாமலைக்கு எம்சாண்ட் மணல் ஏற்றிச் செல்வதாக தெரிவித்தார்.

அதற்கான பில்லை போலீசார் கேட்டபோது உடனடியாக எடுத்து வருவதாக கூறியவர் திரும்ப வராமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து லாரியை சோதனை செய்து பார்த்தபோது அதில் ஆற்று மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து 6 யூனிட் மணல் உடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.