Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சிறுமி கர்ப்பத்தால் பெற்றோர் அதிர்ச்சி; காதலிப்பதாக கூறி ரகசிய திருமணம்: புதுமாப்பிள்ளை மீது போக்சோ வழக்கு

வேலூர், மே 25: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்நிலையில், சிறுமி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை, அதேபகுதியைச் சேர்ந்த தனுஷ்(19) என்பவர் காதலித்து வந்தாகவும், கடந்த நவம்பர் மாதம் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை கர்ப்பமாக்கியதாக தனுஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.