Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கால்வாயில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளர் பலி காட்பாடி அருகே

வேலூர் டிச.23: காட்பாடி அருகே கால்வாயில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி தாலுகா, சேனூர் ஊராட்சியை சேர்ந்தவர் சிவக்குமார்(54). ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சேனூர் ஏரிக்கால்வாய் அருகே அமர்ந்திருந்தாராம். அப்போது, திடீரென கால்வாயில் தவறி விழுந்துள்ளார். மறுநாள் காலை மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.