Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; மாஜி ராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை: வேலூர் போக்சோ கோர்ட் உத்தரவு

வேலூர், ஆக.20: வேலூர் அருகே 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் உத்தரவிட்டது. வேலூர் அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன்(71), முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு கோட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி மோனிகா விசாரித்தார். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட தாமோதரன் மீது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் போலீசார் தாமோதரனை சிறைக்கு அழைத்து சென்றனர்.