Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குடியாத்தத்தில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டிடம் அமைக்க வேண்டும்: குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் மனு

குடியாத்தம், ஆக.19: குடியாத்தம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்.டி.ஓ செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார் தாசில்தார் வடிவேல் வரவேற்றார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், குடியாத்தத்தில் விவசாய துறை சார்ந்த அனைத்து அலுவலகங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டிடம் அமைக்க வேண்டும். வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். விவசாய கடன்கள் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வேண்டும் என மனுக்களை அளித்தனர். விவசாயிகள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆர்டிஓ செந்தில்குமார், அனைத்து கோரிக்கைகள் குறித்தும் துறை ரீதியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள், வருவாய்துறை அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.