Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

காட்பாடி அருகே புதுமண தம்பதி வீட்டில் நகை, பணம் திருட்டு: போலீசார் விசாரணை

வேலூர், ஆக.14: காட்பாடி அருகே புதுமண தம்பதி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகை, வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார்(24) தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் புதுமண தம்பதியை குடும்பத்தினர் பிரிந்து இருக்க கூறினர்.

மேலும் மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். இதனால் செல்வகுமார் வஞ்சூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு திருமணியில் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு 11ம் தேதி சென்று விட்டார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை வழக்கம்போல் வஞ்சூரில் உள்ள வீட்டிற்கு வந்த செல்லக்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த அரை சவரன் தங்க நகை, இரண்டு வெள்ளிக் குத்து விளக்குகள் ரூ.55 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது குறித்த விருதம்பட்டு போலீசாருக்கு செல்வகுமார் ததகவல் தெரிவித்தார். அதன்பேரில் விருதம்பட்டு போலீசார் சம்பவ நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். காட்பாடி அருகே புதுமண தம்பதி வீட்டில் திருட்டு நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.