Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அரசு பாடபுத்தங்களை தமிழகத்தில் அச்சிடுவதற்கு முன்னுரிமை : காட்பாடியில் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி பேட்டி

வேலூர், ஆக 14: அரசு பாடபுத்தங்களை தமிழகத்தில் அச்சிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாக காட்பாடியில் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி கூறினார். காட்பாடியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை நேற்று பாடநூல் கழக தலைவர் லயோலா மணி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி எம்எல்ஏ டாக்டர் சுதாகர், மாவட்ட செயலாளர் நவீன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

பின்னர் பாடநூல் கழக தலைவர் லயோலா மணி நிருபர்களிடம் கூறியதாவது: பள்ளி திறந்து 2 மாதங்களாகியும், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில், உள்ள கிராம பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை, பாடபுத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளதா? என்று கூறுகிறீர்கள். பாடபுத்தகங்களின் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டுவிட்டது.

சில இடங்களில், பாடபுத்தக தட்டுப்பாடு உள்ளதாக சொன்னார்கள். அது தட்டுப்பாடு இல்லை, பள்ளி நிர்வாகம் சொன்ன எண்ணிக்கையில் பாடப்புத்தகங்களை வினியோகித்துள்ளோம். அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், சில குறைகள் இருந்தது. அவை சரிசெய்யப்பட்டுவிட்டது. குறைகள் களையப்படும். வேலூர் மாவட்டத்தில், உருது பாடபுத்தகங்கள் பள்ளி நிர்வாகம் சொன்ன எண்ணிக்கையில் புத்தகங்கள் அனுப்பப்பட்டுள்ளது. குறைகள் இருந்தால் அதனை சரிசெய்வோம். பாடநூல் கழக கிடங்கின் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக உள்ளார். அதனால் இந்த முறை தமிழக அச்சககங்களில் புத்தகங்கள் அச்சிட அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. காட்பாடி புத்தக கிடங்கில், இங்கு மின்சாரம் தொடர்பான பிரச்னை உள்ளது. அவை விரைவில் சரிசெய்யப்படும். கோவை மாணவர் கொலையில் யாரும் அரசியல் செய்யவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.