Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு ஐதராபாத் செர்லப்பல்லி- வேளாங்கண்ணி சிறப்பு ரயில்கள் இயக்கம் தெற்கு ரயில்வே அறிவிப்பு

வேலூர், ஆக.13: வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, தெற்கு மத்திய ரயில்வே சார்பில் ஐதராபாத் செர்லப்பல்லி மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, செர்லப்பல்லியில் இருந்து வரும் ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4 வெள்ளிக்கிழமைகளில் இரண்டு சேவைகளாக, காலை 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் வண்டி எண் 07125 செர்லப்பல்லி-வேளாங்கண்ணி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், நல்கொண்டா, மிர்யாலகுடா, நாடிகொடே, பிடுகுர்லா, சட்டனப்பல்லி, குண்டூர், தெனாலி, பாபட்லா, சீராளா, ஓங்கோல், நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணியை மறுநாள் காலை 9.10 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07126 ெசர்லப்பல்லி-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5 என இரண்டு சனிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட மார்க்கங்கள் வழியாக மறுநாள் இரவு 10 மணிக்கு செர்லப்பல்லியை அடையும். இது இரண்டு சேவைகளாக இயக்கப்படுகிறது.

அதேபோல் செப்டம்பர் 8ம் தேதி செவ்வாய்கிழமை காலை 7.40 மணிக்கு ெசர்லப்பல்லியில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட அதே மார்க்கங்கள் வழியாக கூடுதலாக திருப்பதி, சித்தூர் இரண்டு கூடுதல் நிறுத்தங்களுடன் மறுநாள் புதன்கிழமை காலை 9.10 மணிக்கு வேளாங்கண்ணியை அடையும் வகையில் வண்டி எண் 07127 செர்லப்பல்லி-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஒரு சேவை மட்டும் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 07128 ஆக செப்டம்பர் 9ம் தேதி புதன்கிழமை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட நிறுத்தங்கள் வழியாகவே மறுநாள் வியாழக்கிழமை இரவு 10.15 மணிக்கு செர்லப்பல்லியை அடையும் வகையில் ஒரு சேவை மட்டும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்களில் 3 ஏசி 2 டயர் பெட்டிகளும், 5 ஏசி 3 டயர் பெட்டிகளும், 10 சிலீப்பர் கிளாஸ் பெட்டிகளும், 4 பொது 2ம் வகுப்பு பெட்டிகளும், 2 பிரேக், லக்கேஜ் வேன்களும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 13 (இன்று) காலை 8 மணி முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் அறிவித்துள்ளது.