போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது காட்பாடியில்
வேலூர், நவ.12: காட்பாடியில் போதை மாத்திரை விற்பனை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்தனர். காட்பாடி பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் போதை மாத்திரை விற்பனை செய்வதாக காட்பாடி போலீசாருக்கு ரகசிய கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரி, சில்லரை வியாபாரி என 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 18 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 8 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரைபோலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அஜய்(20) என்பதும்,இவர் போதை மாத்திரை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.